• Sep 20 2024

ராஜா ராணி சீரியல் ரியா நடிக்கும் புதிய சீரியலில் கதாநாயகன் யார் தெரியுமா?- டைட்டில் இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ரியா. மாடர்லிங்கில் ஈடுபட்டு வந்த இவர் இந்த சீரியலில் சந்தியாவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இருப்பினும் அண்மையில் இந்த சீரியலில் இருந்து விலகினார்.மேலும் தனது உடல் எடை அதிகரித்து விட்டதாகவும் உடல் எடையைக் குறைப்பதற்காகவுமே இந்த சீரியலில் இருந்து விலகினார் என்று கூறினார். 


இது தவிர பாக்கியலட்சுமி சீரியல் விஷாலுடன் ஏற்பட்ட காதல் முறிவு தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் என்று கூறப்பட்டது.


இந்த நிலையில் ரியா ஷு தமிழில் சண்டைக்கோழி என்னும் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.இதில் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் கதாநாயகனாக நடித்த நியாஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.அத்தோடு இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement