• Sep 20 2024

மகாவை அடிக்கப் போன சித்ரா... கோபத்தில் கத்திய ராஜலட்சுமி... பூரித்துப் போய் நின்ற மருமகள்... சூப்பரான 'Aaha Kalyanam' promo video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்பங்கள், துயரங்கள் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது. 


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சித்ரா கௌதமிடம் புதிய ஜுவல்ஸ் டிசைன் ஒன்றைக் காட்டுகின்றார். மேலும் கௌதமிற்கு வரப் போற பெண்ணைப் பற்றியும் சித்ரா பெருமையாக பேசுகின்றார்.


அதாவது "உங்க பையன் கல்யாணத்தில் போன குடும்ப மானத்தை ஒப்பேத்திக் கொண்டு வரணும்" என ராஜலட்சுமியிடம் கூறுகின்றார்.


அதற்கு உடனே மகா "ஆமா இந்த நகை டிசைன் எஸ்க்குளோசிவ் தான், ஆனால் அதை ரெடி பண்ணிக் கொண்டு வந்த அத்தனை உழைப்பும் என் வீட்டுக்காரருக்கு சொந்தமானது, உங்க மகனோட உழைப்பு அதில் ஒரு துளி அளவிற்கு கூட இல்லை" என சித்ராவிடம் கோபமாக கூறுகின்றார்.


இதனால் கடுப்பான சித்ரா உடனே மகாவை அடிக்க கை ஓங்குகின்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜலட்சுமி "சித்ரா, யார் மேல கை வைக்கப் போகின்றாய்" எனக் கேட்டுக் கத்துகின்றார். ராஜலட்சுமி  அப்படி சொன்னதும் மகா சந்தோஷத்தில் பூரித்துப் போய் நிற்கின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement