"பாகுபலி" உலகம் முழுவதையும் திரும்பி பார்க்கவைத்த ஓர் படம். அசத்தலான திரைக்கதை, பிரம்மாண்ட காட்சிஅமைப்பு என ஒவ்வொரு காட்சிக்கும் விழிகள் விரிந்து, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை மனதிற்குள் ஏற்படுத்தியது. இப்படம் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.
ஜெய் மகிழ்மதி என்ற கர்ஜனை உடலை அப்படியே சிலிர்க்க வைத்துவிடும். அருவிக்கு நடுவே குழந்தையை ஏந்திய கை... இப்படி ஒரு தொடக்கத்தை இதற்கு முன் நாம் எந்த படத்திலும் பார்த்ததில்லை என்பதால், மனதிற்குள் ஒரு பூரிப்பு ஏற்பட்டு படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியது.
ராஜமாதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற ஒற்றை கேள்வியே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்து, பாகுபலி இரண்டாம் பாகத்தை வெளியிட்டடார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இரண்டாம் பாகம் இரண்டு மடங்கு லாபத்தை பெற்றது.
பாகுபலி படத்தை அடுத்து ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட்டை வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும் பெற்றது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அப்போது பாகுபலி படம் குறித்து பேசிய ராஜமௌலி, ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதன் முதலில் ஸ்ரீதேவியைத்தான் அணுகினோம். ஆனால், அவர் பல டிமாண்ட்களையும், கண்டிஷன்களையும், இது வேண்டும், அது வேண்டும் என கேட்டதால் ஒருகட்டத்தில் நாங்கள் பொறுமையை இழந்துவிட்டோம். எங்களது பட்ஜெட் எகிறிவிடும் என நினைத்தோம். இதையடுத்து, ரம்யா கிருஷ்ணனை அணுகினோம். அவரும் திறம்பட நடித்து அசத்திவிட்டார். இதைப்பார்க்கும் போது ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முடிவை நாங்கள் கைவிட்டது நல்லது தான் என நினைக்க வைத்துவிட்டார்.
Listen News!