நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடைய காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படம் விளையாட்டு போட்டியை மையப்படுத்தி உருவாகிவருவதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.
விறுவிறுப்பாக படத்தின் வேலைகளை முடித்து விட்டு ஜூலை மாதமே ஷூட்டிங்கையும் முடித்துள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தலையில் குல்லா எல்லாம் போட்டுக் கொண்டு மொய்தீன் பாய் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் நிறைவு நாளிலும் கலந்து கொண்டு கேக் கட்டிங் செய்த போட்டோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தனர். மேலும் அந்த திரைப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்கினர்.
மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். அவரது கேரக்டர் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியிருந்தது.அது குறித்து அவர் கூறியுள்ளதாவது, உங்களை வைத்து படம் இயக்குவதே ஒரு மிராக்கிள்.. நீங்க ஒரு ப்யூர் மேஜிக் அப்பா என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Listen News!