44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று சென்னை, மாமல்லபுரத்தில்,தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வினை பிரதமர் மோடி ஆரம்பித் வைத்தார். இப்போட்டியில் ல் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் பங்கேற்க முக்கியத் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்திருந்தார். தனது அப்பாவுடன் எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்து இருந்தார். ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு அறிவிப்புக்கு பிறகு இருவரும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜய்டிவியின் முக்கிய சீரியலில் கமிட்டான கோகுலத்தில் சீதை தொடரின் கதாநாயகன்- அடடே இந்த நடிகரா?
- படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்த கோமாளி பட நடிகை
- போதையில் காரை அதிவேகமாக ஓட்டிய நடிகை- பதுங்கி இருந்து மடக்கிப் பிடித்த போலீஸார்- பாலியல் தொழிலும் செய்தவரா இவர்
- குடும்பத்தினருடன் இலை சாப்பாடு- தனுஷ் மற்றும் செல்வராகவனுடன் குக்வித் கோமாளி வித்யுலேகா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!