• Sep 19 2024

'விஜய் படத்தை காலி செய்வோம்' என ரஜினி - அஜித்தின் பிரியர்கள் செய்த வெறித்தனமான காரியம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

எனினும் லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில்  முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையியில், நெகட்டிவ் விமர்சனங்கள் மூலம் நடிகர் விஜயின்  படத்தை காலி செய்து விடலாம் என ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.


அதன்படி, ரஜினி - அஜித்தின் தீவிர ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக  லியோ டிசாஸ்டர் ஹேஷ்டேக்கை வெறித்தனமாக   டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதேவேளை, நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement