• Sep 20 2024

ரஜினி இப்படிப்பட்டவரா...? பிரஸ் மீட்டில் செய்த இழிவான செயல்... அதுவும் கையில் சிகரெட்டுடன்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

"சூப்பர் ஸ்டாரு யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்..." எனும் பாடலுக்கு அமைவாக சூப்பர் ஸ்டாரை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இவர் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் நெஞ்சங்களையும் தொட்டிருக்கின்றார். 


அவர் வேறு யாருமில்லைங்க. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தான். ஆரம்ப வாழ்க்கையில் ஒரு பஸ் காண்டெக்டராக இருந்த இவர் பின்னர் தமிழ் சினிமாவில் உள்நுழைந்து செய்யாத சாதனைகளே கிடையாது என்று கூறலாம். 

எந்தளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் இப்போதும் இவர் இளம் இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்து அவர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். வயதானாலும் இன்றும் தன்னுடைய பணியை இடை நிறுத்தாது சினிமாவில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றார்.

அந்தவகையில் இவரின் நடிப்பிலும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் ஆனது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்த ஒரு அன்சீன் வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்களிடையே பரவி வைரலாகுவது வழமை. அந்த வகையில் 1995-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிரத்தியேகமாக ரஜினிக்கென்றே ஒரு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்திருக்கிறது.

அப்போது அந்நிகழ்வின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட ரஜினி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கையில் சிகரெட் உடன் பதிலளித்திருக்கிறார். இது குறித்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த பலரும் "ரஜினி சாரா இப்படி?" எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement