• Sep 20 2024

தனது கண்டெக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி... இதுவரை யாருமே பார்த்திடாத அரிய புகைப்படம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகன் என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்.." என்ற பாடலுக்கு அமைவாக இவரைத் தெரியாதவர் என்று யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிப்பில் வெற்றி வாகை சூடி இருக்கின்றார். அதுமட்டுமன்றி அதிகளவான ரசிகர் கூட்டத்தை கொண்டவராகவும் இவர் இருந்து வருகின்றார்.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான இவர் திரையுலகில் தனது திரைபடங்களின் வாயிலாக ஏகப்பட்ட வசூல் சாதனை படைத்திருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியான எந்தஒரு திரைப்படமும் முதலுக்கு மோசமான அளவிற்கு வசூலை பெற்றது இல்லை. எனினும் சமீப காலமாக ஒரு சில படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறி வருகின்றன.



அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த 'அண்ணாத்த' என்ற திரைப்படம் ஆனது கடுமையான விமர்சனங்களுடன் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து வருகின்றார். முதல் படம் தோல்வி அடைந்தமையினால் அவரின் அடுத்த திரைப்படமான 'ஜெயிலர்' வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.




இவ்வாறாக வயதானாலும் தனது நடிப்பினை கை விடாது தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்ற ரஜினிகாந்த் திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் ஒரு பஸ் கண்டெக்டராக இருந்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


இந்நிலையில் இவர் நடிப்பதற்கு வந்த பின்னர் தனது கண்டெக்டர் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு அரிய புகைப்படமானது தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது ரஜினியின் அரிதான அன்சீன் போட்டோஸ் எது வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வைரலாவது வழக்கம். 



அதன்படி நம்ம ரஜினிகாந்த் தனது பழைய நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா..? அப்புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement