சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'பாபா'. இப்படத்தின் மற்றோர் முக்கிய விடயம் என்னவெனில் ரஜினிகாந்தே இதற்கு கதை, திரைக்கதை, எழுதி தயாரித்தும் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் படுதோல்வியடைந்த இப்படத்தை தற்போது மீண்டும் தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தை மறுபடியும் விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதாவது பாபா படத்தில் 7 மந்திரங்கள் இடம்பெற்ற நிலையில், தற்போது வெளியாகி உள்ள ரீ ரிலிஸ் படத்தில் வெறும் 5 மந்திரங்கள் போதும் என தேவையில்லாத ரம்யா கிருஷ்ணனின் அந்த படையப்பா மொக்கை சீனை தூக்கிட்டாங்க என ஆரம்பத்திலேயே அதிரடியாக பேசி ஸ்கோர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அதுமட்டுமல்லாது மீம் கிரியேட்டர்களுக்கு செமத்தியான தீனி மாட்டிடுச்சு என்றும் தாறுமாறாக வெளுத்து வாங்கி உள்ளார். மேலும் "எம்ஜிஆர் மாதிரி சிஎம் ஆகணும் என்ற ஆசை இருந்ததால் தான் பாபா படத்தையே ரஜினி எடுத்தார் என்றும் அலிபாபா படத்தின் காட்சியை போட்டு அவரும் மூடநம்பிக்கையில் மாட்டிக்கிட்டார் என ரஜினி பேசும் காட்சிகள் வேடிக்கையாக உள்ளது.
அந்த படத்தில் அது ஒரு பாஸ்வேர்ட் மட்டும் தான். எம்ஜிஆர் எப்போதுமே மூடநம்பிக்கைக்கு துணை போனதில்லை என்றும் ரஜினி வேப்பிலையை வைத்து ஆடிக்கிட்டே சிஎம் ஆகலாம்னு எப்படி நினைத்தார் எனவும் கழுவி ஊற்றி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அத்தோடு "அப்பவே இந்த படம் தேறாது என ரசிகர்கள் ஃபிளாப் ஆக்கிய நிலையில், இப்போ சாமி படங்களை எடுத்து காந்தாரா போல கல்லா கட்டலாம் என நினைத்து ரஜினி ரிலீஸ் செய்துள்ளார் என்றும் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்" என பங்கமாக பாபாவையே பந்தாடியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பெரியாரா இருந்தவரு ராஜாஜியா மாறிட்டாருன்னு ஒரு வசனம் வருது.. யார் வேண்டுமானாலும் ராஜாஜியா ஆகலாம். ஆனால், யாராலும் பெரியாரா ஆக முடியாது என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளதோடு, பாபா படம் வெறும் மூட நம்பிக்கைகளை மட்டுமே விதைக்கும் கூடாரமாக உள்ளது என்றும் ரசிகர்களுக்கு பிரயோஜனப்படும் வகையில் மட்டுமின்றி ரசிக்கும் அளவுக்கு கூட ஒன்றுமே இல்லை எனவும் கொளுத்திப் போட்டுள்ளார்.
இவ்வாறாக பாபா படத்தை பிரித்து மேய்ந்து பெரிய விமர்சனமாக போட்டு துவைத்து தொங்கப் போட்டதை பார்த்து கடுப்பான ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ப்ளூ சட்டை மாறன் உடன் சண்டைப் போட்டு வருகின்றனர்.
Listen News!