• Nov 14 2024

ஜெயிலர் படத்துக்காக திடீரென சம்பளத்தை குறைத்த ரஜனி-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட மீனா, நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

எனினும் இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள்.

மேலும் இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார் எனவும் தகவல் வெளியாகி உன்னது.

இந்த படத்தில் நடிக்குமாறு ஐஷ்வர்யாராயை படக்குழுவினர் அணுகியுள்ளனர். இருப்பினும் அவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு அண்ணாத்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக ரஜினிகாந்த் தனது 169 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதற்காக தனது சம்பளத்தை பாதியாக குறைத்து 50 கோடி ரூபாய் மட்டுமே வாங்குவதாகவும் முன்னதாக தகவல் பரவியது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement