விஜய், அஜித் என தற்போது டாப் நடிகர்களாக உள்ள நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடத்தே வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அத்தோடு இவர்களின் ரசிகர்களுக்கிடையே பெரிய சண்டை உருவாகும் விஷயம் என்றால் அது அவர்களின் திரைப்படங்களின் காலெக்ஷன் என்று தான் கூற வேண்டும்.
அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எப்போதும் முதல் நாளில் அதிகாலை ஷோஸ்களில் இருந்தே ஒட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
மேலும் அப்படி ரசிகர்கள் மட்டுமே முந்திக்கொண்டு பார்க்கும் அந்த FDFS ஷோஸ்களை அறிமுகப்படுத்தியதே ரஜினி ரசிகர்கள் தானாம்.
ஆம், 1980-ஆம் ஆண்டு ஜூலை ரஜினியின் காளி திரைப்படம் திருச்சி சென்ட்ரல் திரையரங்கில் வெளியானது. மேலும் அந்த திரையரங்க நிர்வாகியிடம் பேசி, காளி வெளியாகும் தினத்தில் திரையரங்கை குத்தகைக்கு எடுத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.
ரசிகர்களுக்கு ரசிகர்களே டிக்கெட் விநியோகம் செய்து ரஜினி படத்தை முதலில் அவரின் ரசிகர்களே பார்க்கும் படி ரசிகர்கள் மன்ற காட்சியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தனர் திருச்சி ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- நடிகை பூஜா ஹெக்டே கட்டியிருக்கும் மெட்டாலிக் லினன் சாறியின் விலை என்ன தெரியுமா?
- லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இப்படி- கோலிவுட் வட்டாரத்தில் முகம் சுளிக்கும் பிரபலங்கள்…!
- வெளிநாட்டு படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த ஏ.ஆர்.ரஹ்மான்
- பிரபல நடிகரின் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
- 78வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானியின் புகைப்படங்கள்.
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!