இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ஆவார்.பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எந்திரன்.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.குறிப்பாக பாக்ஸ் ஆபிசில் இமாலய வசூலை செய்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படம் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. அதில் ஒரு பாட்டு தான் கிளிமஞ்சாரோ.
இந்நிலையில், இப்பாடலின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ரஜினிகாந்த் இருக்கிறார்கள்.
Listen News!