வடக்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெற்கே பிரதமர் மோடியும் தியானம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இருவரும் ஒரே பாதையில் செல்வார்களா? ஒன்று சேர்வார்களா? என்ற கேள்வியை ரஜினி ரசிகர்களும் பாஜகவினரும் எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நேற்று இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருகிறார். அதேபோல் வடக்கில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேதார்நாத்தில் தியானம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரதமர் மோடி மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் ரஜினிகாந்த்தும் பாஜக ஆதரவாளர் என்ற நிலையில் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர் இருவரும் ஒன்று சேருவார்களா? ஒரே பாதையில் பயணிப்பார்களா? என்ற கேள்வியை ரஜினி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினிகாந்த் கடந்த 2021ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக அறிவித்து கடைசி நேரத்தில் திடீரென பின்வாங்கி விட்டதை அடுத்து மீண்டும் அரசியல் பாதைக்கு வருவாரா? அல்லது தனது ஆன்மீக மற்றும் சினிமா பயணத்தில் மட்டும் ஈடுபடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் ஒரே நேரத்தில் ரஜினிகாந்த் வடக்கிலும் பிரதமர் மோடி தெற்கிலும் தியானத்தில் ஈடுபடுவது எதிர்பாராத ஒற்றுமையாக கருதப்படுகிறது.
Listen News!