• Sep 20 2024

ரஜினியால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியல, அதான் இப்படிப் பண்ணுறாரு- ஓபனாகப் பதிலடி கொடுத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படம் ஓவர்சீஸில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1.2 கோடி கலெக்ஷனை பெற்றுள்ளது.இதனால் இப்படத்தின் வரவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான ராமானுஜம் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில்  ரஜினி எப்போதுமே சொந்தமா பேச மாட்டாரு, யாரோ எழுதிக்கொடுத்துதான் பேசுவாரு, இதை அவரே பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். இந்தியாவினுடைய மூத்த நடிகராக இருக்கக்கூடிய ரஜினி, ஒரு நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்று தெரிந்து பேச வேண்டும்.

கலைப்புலி தாணுதான் பைரவி படம் வெளியான போது சூப்பர் ஸ்டார் என்று கட்அவுட்டில் வைத்தார். அந்த படம் வெளியான போது, ரஜினி சூப்பர் ஸ்டாராக இல்லை. எதிர்காலத்தில் அவர், சூப்பர் ஸ்டாராக வர வேண்டும் என்ற நோக்கத்தில் தாணு அந்த பட்டதை கொடுத்தார். அதற்காக ரஜினி கடுமையாக உழைத்து அந்த பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்.


ஆசியாவில் ஜாக்கி ஜானுக்கு அடுத்து 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் ரஜினிகாந்த் தான். சிவாஜி படத்திற்கு அவருக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்த சாதனையை விஜய் முறியடித்து விட்டார். ரஜினியை விட அவருக்கு லியோ படத்தில் அதிக சம்பளம். அதே போல, இன்றைக்கு விஜய்க்கு என்று சினிமாவில் தனி மார்க்கெட் இருக்கிறது. அது ரஜினிக்கு இல்லை.

ரஜினியின் ஒரு படம் ஓடவேண்டும் என்றால், தமன்னாவின் ஆட்டம், பாலிவுட், டோலிவுட் என் அனைத்து மொழிகளில் இருந்து நடிகர்களை இறக்க வேண்டி உள்ளது. ஆனால், விஜய்க்கு அப்படி இல்லை. இதை எல்லாம் ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அந்த பேட்டியில் பத்திரிக்கையாளர் ராமானுஜம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement