'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' போன்ற படங்களை இயக்கி, மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குநர் நெல்சன் திலீப் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தாலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் ரஜினிக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்கு பின்னர், நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கிய இந்த திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்வதற்காக ரசிகர்கள் தியேட்டருக்கு முன் படையெடுத்து வருகின்றார்கள். அதில் குறிப்பாக திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா, உமா திரையரங்கில் டிக்கெட் தொடர்பான ஆன்லைன் பதிவு குறித்து திரையரங்கு மேலாளர் மாயாண்டியிடம் ரஜினி ரசிகர்கள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதன் போது நந்தவனப் பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், நெட்டு தெரு ஜோசப் ஆகிய இருவரும் அந்தத் திரையரங்கு மேலாளர் ஆகிய மாயாண்டியிடம் அதிகளவு டிக்கெட் வேண்டும் எனக்கேட்டிருந்தனர். இது பின்னர் வாக்குவாதமாக மாறி மேலாளரின் காதில் குறித்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான திரையரங்கு மேலாளர் மாயாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
Listen News!