• Nov 10 2024

காந்தாரா பட இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு பரிசளித்த ரஜினிகாந்த்-அதுவும் இந்த பொருளா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

காந்தாரா திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில வாரங்களுக்கு முன் அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு பரிசும் வழங்கி உள்ளார்.

கன்னட திரையுலகில் வெளியாகும் படங்களுக்கு தற்போது இந்தியா முழுவதும் மவுசு கிடைத்து வருகிறது. எனினும் இதற்கு காரணம் கே.ஜி.எஃப் படம் தான். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த அப்படத்தின் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தன. எனினும் குறிப்பாக கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் 1200 கோடிக்கு மேல் வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.


கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் தான் காந்தாரா.அத்தோடு  ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கியிருந்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

எனினும் தற்போது அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பி வரும் காந்தாரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம்.


இவ்வாறு தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வரும் காந்தாரா திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில வாரங்களுக்கு முன் அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டினார். எனினும் அதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், இந்த சந்திப்பின் போது சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார் மற்றும் அவர் கொடுத்த பரிசு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி படத்தை பற்றி ரிஷப் ஷெட்டியிடம் வியந்து பேசிய ரஜினிகாந்த், காந்தாரா மாதிரி படமெல்லாம் 50 வருஷத்துக்கு ஒருக்க தான் நடக்கும் என சொன்னாராம். அத்தோடு இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தாராம் ரஜினி. சூப்பர்ஸ்டாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement