• Nov 17 2024

பாதை மாறிப்போய் டிராபிக்கில் சிக்கிக் கொண்ட ரஜினிகாந்த்- இயக்குநர் ஷங்கர் கொடுத்த ஐடியா- கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயஜலர் திரைப்படம ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதோடு நல்ல வரவேற்பையும் பெற்றது. இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் எந்திரன். அப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தின்  ஒரு காட்சியை மீஞ்சூர் கடற்கரையில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். மாலை 6 மணிக்கு காட்சி.. நீங்கள் இந்த வழியாக வந்தால் டிராபிக் இல்லாமல் வந்துவிடலாம் என ரஜினியின் உதவியாளரிடம் ஏற்கனவே சொல்லப்பட்டது.ஆனாலும், நாம் முன்பே போய்விடுவோம் என நினைத்த ரஜினி 2 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார். 


ஆனால், அவர்கள் எந்த வழியில் சொன்னார்களோ அதில் போகாமல் கார் வேறு பாதையில் சென்றுவிட்டது. ஒரு இடத்தில் செம டிராபிக். முன்னாலும் பின்னாலும் லாரிகள். சுமார் இரண்டரை மணி நேரம் காரிலேயே இருந்துள்ளார் ரஜினி. 6 மணி ஆகிவிட்டது.

உதவியாளரிடம் கோபமடைந்த ரஜினி காரின் கீழே இறங்கிவிட்டார், தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என நினைத்த ரஜினி ஒரு துண்டால் தலையில் கட்டிக்கொண்டார். எதாவது பைக் வந்தால் லிஃப் கேட்டு போய்விடலாம் என காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு டிராபிக் போலீஸ் வந்துள்ளார். அவரிடம் ‘நான் ரஜினி. ஷூட்டிங் லேட் ஆகிவிட்டது. என்னை இந்த இடத்தில் விட்டு விட முடியுமா?’ என அவர் கேட்க அந்த போலீஸ்காரர் நம்ப வில்லையாம்.


ஒருவழியாக அவருக்கு புரிய வைக்க அவருக்கோ ஆச்சரியம். ‘நீங்கள் உட்காருங்கள்’ என சொல்லி அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தாமதமாக வந்ததால் குற்ற உணர்ச்சியில் இருந்த ரஜினி ஷங்கரை பார்க்கவே சங்கோஜப்பட்டாராம். இது தெரிந்து ஷங்கரே அவரிடம் வந்து பேசி ‘பரவாயில்லை சார்.. இது நடப்பது இயல்புதான்’ என சொல்லி அவரை இயல்பாக்கிய பின்னர் 7.30 மணிக்கு அந்த காட்சியை எடுத்தார்களாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement