• Sep 20 2024

லோகேஷுடன் கைகோர்த்த ரஜினிகாந்த்... வெறித்தனமாக வெளிவந்த 'தலைவர் 171' அப்டேட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதனால் உற்சாகமான சூப்பர் ஸ்டார், தனது 170 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். அதாவது லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள தலைவர் 170 படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


விரைவில் இப்படத்தின் உடைய ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், ரஜினி நடிக்கும் 171வது படத்தின் (Thalaivar 171) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடன் இணைகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.


இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பினை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement