தென்னிந்திய மொழிகளில் அனுபவம் வாய்ந்த புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஏ.வி.எம் ப்ரொடக்ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்து வழங்கியுள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தியது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.
1945 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது ஏ.வி.எம் சரவணன் கவனித்து வருகிறார்.
மேலும் இவர் தயாரித்த ரஜினியின் எஜமான், சிவாஜி, சூர்யாவின் பேரழகன், அயன், விக்ரமின் ஜெமினி உள்பட பல படங்கள் கிட்டத்தட்ட 100 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
ஏ.வி.எம் சரவணனுக்கு கையில் அடிபட்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை கடந்த 29.04.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இவ்வாறுஇருக்கையில் ரஜினிகாந்த் இன்றுஏ.வி.எம் சரவணன் வீட்டிற்குச் சென்று அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதனை ஏ.வி.எம் குழுமத்தைச் சேர்ந்த அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Superstar @rajinikanth, my grandfather and SPM Sir, when Rajini Sir visited today ♥️#SuperstarRajinikanth #AVMProductions @avmproductions pic.twitter.com/yvjfribYue
Listen News!