• Sep 20 2024

ஒரே நாளில் திரைக்குவரும் ராஜனிகாந்த், சிவகார்த்திகேயன் திரைப்படம்... வசூல் வேட்டையில் அடிவாங்குமா அயலான்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு வசூலில் சிக்கல் வரும் என எதிர்கார்க்கப்படுகிறது.  


அயலான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப விஷயங்கள் காரணமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் உருவாக்கி உள்ள லால் சலாம் திரைபடம்மும் அதே பொங்கல் பண்டிகை அன்று வெளியிட போவதாக அறிவித்தல் கிடைத்துள்ளது. 


அடுத்த வருடம் பொங்கல் முன்னிட்டு கிட்டதட்ட 4 திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் திரைபடம்மும் வெளியாவது அயலான் திரைப்படத்திற்க்கு வசூல் ரீதியில் சிக்கலை ஏற்ப்படுத்தும்என திரையுலக வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement