• Nov 14 2024

வெளிநாட்டில் ஆடை இன்றித் தவித்த ரஜினிகாந்த்- உதவி செய்து மானத்தைக் காப்பாற்றியது யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஒருகாலத்தில் நடிக்க வந்தவர்களுக்கு எப்படி சிவாஜியின் தாக்கம் இருந்ததோ அதேபோல் கடந்த 40 வருடங்களாக நடிக்க வருபவர்களுக்கு ரஜினிகாந்த்தின் தாக்கம் இருக்கும். இனி நடிக்க வருபவர்களுக்கும் இருக்கும். அந்த அளவு தனது தனித்த ஸ்டைலால் கவர்ந்து வைத்திருக்கிறார். அவர் தலை கோதும் முறை, நடை, உடை, அவரது உடல் மொழி என அனைத்திலும் ஸ்டைல் ததும்ப ததும்ப நிறைந்திருக்கும்.

பேருந்து நடத்துனராக இருந்தவர் சினிமா மீது ஆர்வத்தில் சினிமா கல்லூரியில் படித்து பாலசந்தர் கண்ணில் பட்டு திரையுலகுக்கு அறிமுகமானார். அபூர்வ ராகங்கள் முதல் படமாக அமைந்தது. அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும், கமல் ஹாசனுடனும் நடித்துவந்தார். இருப்பினும் தனது ஸ்டைலால் தனித்தே தெரிந்தார். ஒருகட்டத்தில் கமல், ரஜினி என இருவருமே முடிவெடுத்து தனித்தனியாக நடித்தனர்.

ரஜினிகாந்த் தனியாக நடிக்க ஆரம்பித்ததும் அவருக்கென்ற மார்க்கெட் சரசரவென உயர்ந்தது. கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட ரஜினி அவற்றில் என்னென்ன வித்தியாசம் காண்பிக்க முடியுமோ அத்தனையையும் காண்பித்தார். இதன் காரணமாக ரஜினி இந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறினார்.

ரஜினிகாந்த் இப்போது கொஞ்சம் பக்குவம் அடைந்திருக்கலாம். ஆனால் நடிக்க வந்து வளர்ந்த பிறகு தனது மனதில் பட்டதை யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் பேசியவர். இதனால்தான் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு சமயம் முட்டிக்கொண்டது. அதனையடுத்து திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு குரல் கொடுத்தது அனைவரும் அறிந்தது. 


இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்றபோது மாற்றுவதற்குக்கூட துணி இல்லாமல் ரஜினி தவித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, நடிகர் சங்கத்தின் கடனை தீர்ப்பதற்காக நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டார். விஜயகாந்த்தின் தீவிர முயற்சியால் ரஜினிகாந்த்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படிப்பட்ட சூழலில் மலேசியா, சிங்கப்பூருக்கு விமானத்தில் அனைவரும் சென்றிருக்கிறார்கள். 

ஆனால் அங்கு சென்று இறங்கியதும் ரஜினி துணி வைத்திருந்த லக்கேஜ் மிஸ் ஆகிவிட்டதாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார். மேலும் அப்போது ரெடிமேட் உடை எடுப்பதற்கும் நேரம் இல்லாததால், அன்று நடந்த கலை நிகழ்ச்சியில் விஜயகாந்த்தின் சட்டையை போட்டுக்கொண்டாராம் ரஜினி. அந்த சட்டை அவருக்கு பெரியதாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் அணிந்துகொண்டாராம். இதனை பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். 


Advertisement

Advertisement