'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகவிருக்கின்றது. இப்படத்தினை நெல்சன் இயக்குகின்றார். அத்தோடு சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கின்றனர். பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, அதனைத் தொடர்ந்து பல இடங்களில் இடம்பெற்ற நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் முன்னதாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் தன் காட்சிகளை நிறைவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் சுதந்திர தின விடுமுறையைக் குறிவைத்தே சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ரிலீசாக உள்ளதால், இந்த இரு படங்களும் ஒரு சில நாள்கள் வித்தியாசத்தில் ரிலீசாகலாம் எனவும் கூறப்படுகிறது.
Superstar - Nelson - Sun Pictures mass action entertainer #Jailer planning as Independence day weekend, August 10 release...
Rajinikanth - Mohanlal - Shivanna - Tamannaah pic.twitter.com/IyrysMlP3i
Listen News!