• Sep 21 2024

வெளிநாட்டில் குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்ற ரஜினிகாந்த்- இதுவரை யாரும் பார்த்திடான அன்சீன் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த வந்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது என்பதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் உடன் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியானாலும் அது ரசிகர்களிடையே எப்போதும் வைரலாவது வழக்கம்.அப்படி ரஜினிகாந்த் வெளிநாட்டில் தனது மனைவி மற்றும் மகளுடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement