ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.மேலும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடித்துவருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனினும் சமீபத்தில் மோகன்லால் இந்தப் படத்தில் நடிப்பதை சன் பிக்சரஸ் நிறுவனம் உறுதி செய்தது.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 60% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இப் படப்பிடிப்பிற்காக கடந்த ஏழாம் தேதி ஹைதராபாத் புறப்பட்ட ரஜினி படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை திரும்பினார். அங்கு மோகன்லாலுக்கும் அவருக்குமான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிவருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.
இவ்வாறுஇருக்கையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது ரஜினி ரசிகர் ஒருவர் அணிவித்த பொன்னாடை அவர் கையில் இருந்து நழுவி சென்றபொழுது அக்கறையுடன் பொன்னாடையை ஞாபகார்த்தமாக எடுத்துச் எடுத்துச் சென்றார் ரஜினிகாந்த். அத்தோடு இந்த சம்பவம் அந்த ரசிகரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அத்தோடு ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். முன்னதாக ஜெயிலர் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. அதன்படி ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார் என்றும் அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!