அண்ணாத்தா திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் ஜெயிலர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதோடு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் ஆகியோரும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்திற்கான போஸ்ட்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தின் போஸ்டர் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது ரத்தக் கறையுடன் ஒரு கத்தி தொங்குவது போன்றும், பின்னணியில் பாழடைந்த தொழிற்சாலை இருப்பது போலவும் அப்போஸ்டர் வெளியாகி இருந்தது.
அப்பின்னணியில் உள்ள தொழிற்சாலையின் புகைப்படத்தைக் கூகுளில் எடுத்து பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
அந்தத் தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோவை கண்டு பிடித்த நெட்டிசன்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது "போட்டோஷூட் கூட நடத்தாமல் இவ்வளவு அல்டசியமாகவா போஸ்டரை வெளியிடுவார்கள்" என இயக்குநர் நெல்சனை விமர்சித்தும் வருகின்றனர்.
பிற செய்திகள்
- நடிகை சினேகாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா..அவரே பதிவிட்ட பதிவு..!
- பிரபல நடிகரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்-தீயாய் பரவி வரும் தகவல்..!
- விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு CDP வெளியீடு….திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்வு
- கமல்ஹாசனை சந்தித்த ரஜனி பட இயக்குநர்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- அர்ஜுன் செய்த செயல்-மார்க்கெட் இல்லாமல் இருக்கும் இவர் இப்படி செய்யலாமா..? விளாசும் நெட்டிசன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!