நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.
நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டதாக தெரிவித்து இருந்தனர்.
எனினும் தற்போது ஜெயில் செட் உடன் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு இயக்குநர் நெல்சன் உடன் ஸ்டண்ட் சிவா எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்நிலையில் தற்போது இணையதள வாசிகள் ஜெயிலர் என்ற தலைப்பில் இதற்கு முன் வெளியான திரைப்படங்களின் போஸ்டர்ஸை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வகையில் மலையாளத்தில் Jailer என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் ஒரு வெளிநாட்டை சேர்ந்த திரைப்படமும் இதேபோல் Jailer என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது.அப்படங்களின் போஸ்டர்ஸை தான் இணையத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து காப்பியடித்து விட்டார்கள் என்றே பேச்சே சமூக வலைதளங்களில் அதிகம் எழுந்துள்ளது. அதன்படி நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டரில் சிவகாரத்திகேயன் எப்படி இருந்தாரோ அப்படியே ரஜினிகாந்த் ஜெயிலர் போஸ்டரில் இருக்கிறார் என்றும் ருத்ராட்சையும் கண்ணாடியின் ஃப்ரேமிலும்தான் வித்தியாசம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Listen News!