நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஒரு அதிரடி திரைப்படம் ஜெயிலர். இந்த படத்திற்கு திரைக்கதையை கே.எஸ். ரவிக்குமார் எழுதி உள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் மலையாள நடிகர் மோகன்லால், யோகி பாபு, சிவ ராஜ்குமார், மிர்னா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தை கலாநிதி மாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் 14, 2023 அன்று அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இப்படம் குறித்து சேனல் ஒன்றில் Cheyyar Balu பேட்டி அளித்திருந்தார்.அந்தவகையில் ''சோஷியல் மீடியாவில் ஜெயிலர் படத்தோட கதை சிவகார்த்திகேயன் உடைய அப்பாவின் ரியல் ஸ்டோறியை தான் படமாக எடுக்கிறாங்க அப்படினு டாக் போய்க்கொண்டிருக்கு இது உண்மையா''? என்ற கேள்விக்கு ''அதை நானும் தான் பாத்தன். நெல்சனும் ,சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள்.ஒண்ணா விஜய் டிவியில் இருந்தவங்க.நெல்சன் கிட்ட அசிஸ்டன்டா ஒர்க் பண்ணி இருக்காரு.அதனால சிவகார்த்திகேயன் உடைய அப்பாவ பத்தியெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கலாம்.அப்படி என்ற டாக் இருக்கு.ஜெயிலர் கதை அது தானா எண்டு தெரியல.அது மாதிரி இருந்தால் கூட அது ரொம்ப சிறப்பா இருக்கும்.
சிவகார்த்திகேயனுடைய அப்பா மிக நேர்மையான ஜெயிலர் என்ற பெயரை வாங்கினவரு. ஜெயில்ல ஒரு பொருள் கூட யூஸ் பண்ண கூடாதென்னு வாட்டர் பாட்டில் கூட கொண்டு போனாரு.அப்படி என்ற அளவிற்கு நாம கேள்விப்பட்டிருக்கம்.இதை தாண்டி பாத்தீர்களானால் பல கைதிகளை நல்வழிப்படுத்தியிருக்காரு.சில பேர படிக்கெல்லாம் வ வைச்சிருக்காரு.எந்த ஒரு கறையும், களங்கமும் இல்லாத மனிதர்.இது உண்மையிலேயே ஜெயிலர் கதையா இருந்தது என்றால் சூப்பரா இருக்கும் அதற்கு பொருத்தமானவர் எண்டா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்''.என கூறினார்
Listen News!