தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அதனால் தானோ என்னவோ தெரியவில்லை "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்..." என்ற பாட்டு உருவாகி இருக்கின்றது. மேலும் தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை உலகறிய செய்த பெருமையும் இவரையே சாரும்.
தனது ஆரம்ப வாழ்க்கையில் ஒரு பஸ் கண்டெக்டராக இருந்த இவர் இன்று உலகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு பிரபலமாக உயர்ந்து நிற்கின்றார். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அதில் அதிகமானவை வெற்றிப் படங்களாக மாறி சாதனை படைத்திருக்கின்றன.
அன்று மட்டுமல்லாது இன்றும் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடக்கும் வகையில் நடித்து வரும் ரஜினி 'அண்ணாத்த' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகின்ற 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சுந்திர தினத்தை மட்டுமின்றி தனது 47 வருட திரையுலக பயணத்தையும் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அப்புகைப்படங்களை நேற்று அவரின் மூத்த மகளாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருகின்றார். அதுமட்டுமன்றி இவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் ஜோடியாக நேற்றைய கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Our lovely Jilluma .. Appa’s greatest fan and the superstar of our family 💫💫💜💜☺️☺️🤗🤗🥰 @OfficialLathaRK @rajinikanth @ash_rajinikanth pic.twitter.com/ccxVeoWRMW
அத்தோடு அப்பதிவில் “எங்களின் அன்பான ஜில்லுமா, அப்பாவின் மிக பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்” எனவும் பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் "நம்ம சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகை இவர் தானா?" என தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!