• Nov 17 2024

பாரதிராஜாவுக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு... மொத்த சம்பளமே இவ்வளவு தானா?ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம், தலைவர் 171 படங்களில் பிஸியாக இருக்கிறார்.

ரஜினியின் கேரியரில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே மிக முக்கியமான திரைப்படமாகும்.இந்தப் படத்தில் நடிக்க வெறும் 500 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய ரஜினி, இப்போது கோடிகளில் வாங்கி வருகிறார்.

இந்நிலையில், கொடி பறக்குது திரைப்படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தற்போது தெரியவந்துள்ளது.

பாரதிராஜாவுக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு:கே பாலச்சந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரஜினி. ஆரம்பத்தில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த ரஜினி, தற்போது இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். 70 வயதை கடந்த போதும் ஹீரோவாக மட்டுமே அசத்தி வருகிறார் ரஜினி. தற்போது ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 படங்கள் ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

அதேநேரம் ஒரு படத்திற்காக 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால், 16 வயதினிலே படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாகவும், ஸ்ரீதேவி நாயகியாகவும் நடித்த இந்தப் படத்தில் பரட்டை என்ற நெகட்டிவ் கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார்.

16 வயதினிலே படத்தில் ரஜினி பேசிய "இது எப்படி இருக்கு" என்ற பஞ்ச் வசனம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் ரொம்பவே பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 16 வயதினிலே படத்திற்குப் பிறகு ரஜினிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. 1977ம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்குப் பிறகு, ரஜினி - பாரதிராஜா கூட்டணி மீண்டும் கொடி பறக்குது படத்தில் இணைந்தது.

1988ல் வெளியான இந்தப் படத்தில் ரஜினியுடன் அமலா, ஜனகராஜ், மணிவண்ணன், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தை முதலில் வேறொரு இயக்குநர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், பாரதிராஜா இயக்கினால் தான் நடிப்பேன் என தயாரிப்பாளரிடம் ரஜினி கூறிவிட்டாராம். இந்த தகவல் பாரதிராஜாவிடம் சென்றதும், அவரே ரஜினியை நேரில் சந்தித்துள்ளார்.

ரஜினி அப்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து வந்த நேரம் என்பதால் அவர் பல லட்சங்களில் சம்பளம் வாங்கியுள்ளார். அதனால் ரஜினியை சந்தித்த பாரதிராஜா, கொடி பறக்குது படத்திற்கு 30 லட்சம் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் தயங்குவதாக தெரிவித்துள்ளார். உடனே பாரதிராஜாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த வெறும் ஐந்து ரூபாயை மட்டும் அட்வான்ஸாக எடுத்துக்கொண்ட ரஜினி, படம் முடிந்த பிறகு மீதி பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டாராம்.

அதன் பின்னர் கொடி பறக்குது திரைப்படம் வெளியாகி வெற்றிப்பெற்ற பிறகு, 30 லட்சம் பணத்துடன் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். ஆனால் ரஜினி 20 லட்சம் ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு, 10 லட்சத்தை பாரதிராஜாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இதனைப் பார்த்து பாரதிராஜா ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம். மேலும் விரைவில் இன்னொரு படத்தில் இணைவோம் எனவும் ரஜினியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதன்பின்னர் ரஜினி - பாரதிராஜா இருவரும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement