மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த விமர்சனங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் இப்படமானது கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
இப்படமானது உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் இப்படத்தைப் பார்ப்பதற்காக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். படத்தின் வசனங்கள், காட்சிகள், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பு என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் இப்படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார்.
Keerthy now https://t.co/4cFGyg9CTP pic.twitter.com/mjIJiFC6Hz
இதனையடுத்து ரஜினிகாந்த் ட்வீட்டிற்கு கீழே ரசிகர்கள் பலரும், “ஏன் மாமன்னன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பெயரை பதிவிடவில்லை?” என கேள்வியெழுப்பியுள்ளனர். அத்தோடு ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் அவரின் தங்கையாக ‘தங்க மீனாட்சி’ கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் "தங்கையை இப்படி மறந்து விட்டீர்களே" என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!