• Sep 21 2024

எகிறும் 'மாமன்னன்' வசூல்... நேற்று மட்டும் இத்தனை கோடியா..? ரஜினியால் தியேட்டருக்குப் படையெடுக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து நேற்றைய தினம் வெளியான திரைப்படம் தான் 'மாமன்னன்'. இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார். 


அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வடிவேலுவும் மாமன்னன் படத்தில் ஒரு ஹீரோதானாம். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக இப்படத்தின் மூலமாக அழுத்தமான ரோலில் நடிப்பதனால் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் படம் வெளியான நான்கே நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்ற மாமன்னன் படம் நேற்று மட்டும் ரூ. 2.7 கோடி வசூல் செய்துள்ளது. இவ்வாறாக இப்படமானது தினமும் கோடிகளில் தான் வசூல் செய்து வருகின்றது.


அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த வசூல் வேட்டையின் தீவிரம் மேலும் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.  ரஜினியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, தலைவா நீங்களே பாராட்டிவிட்டீர்கள் என்றால் அது கண்டிப்பாக நல்ல படமாகத் தான் இருக்கும் எனக் கூறி டிக்கட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement