கோலிவுட் சினிமாவில் திறமையான நடிகர், பிரபலமான தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஒருவராக இருப்பவரே உதயநிதி ஸ்டாலின். இவர் சினிமாவைத் தாண்டி எம்.எல்.ஏ. ஆனபோது பிரபலங்கள் பலரும் சந்தோஷப்பட்டார்கள்.
இந்நிலையில் தற்போது இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். அவர் பதவியேற்றுக் கொண்டதை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் "தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என ட்வீட் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் கடுப்பாகிவிட்டார்கள்.
அதாவது ரசிகர்கள் இது தொடர்பில் கூறியிருப்பதாவது, "சத்தியமாக இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தலைவரே. தயவு செய்து ரசிகர்களின் இதயத்தை உடைக்காதீர்கள்" என தெரிவித்துள்ளனர்.
மேலும் "பிற விஷயங்களை எப்படி பார்த்தும், பார்க்காதது மாதிரி இருக்கிறீர்களோ, உதயநிதி விஷயத்திலும் அப்படியே அமைதியாக இருந்திருக்க வேண்டும். நீங்கள் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னதை கூட ஏற்க முடிகிறது. ஆனால் இதை ஏற்க முடியவில்லை. வாரிசு அரசியலை ஆதரிக்கிறீர்களே. வாழ்த்து தெரிவிக்காமல் கடந்து போயிருக்கலாம்" எனவும் கூறி வருகின்றார்கள்.
எது எவ்வாறாயினும் தன் கலைக்குடும்பத்தை சேர்ந்த தம்பி உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதால் பாசமாக வாழ்த்தினார் ரஜினி. ஆனால் அதனால் வம்பில் சிக்குவார் என்று யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ரஜினிகாந்த் வாழ்த்தியதில் என்ன தவறு இருக்கிறது, எங்கள் உதய் அண்ணா அவரின் கடின உழைப்பால், நற்செயல்களால் இந்த பதவிக்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல் இல்லை. சும்மா எதையாவது சொல்லி ரஜினியை திட்ட வேண்டாம் எனப் பதிலுக்கு கூறி வருகின்றார்கள் உதயநிதி ஸ்டாலினின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
Listen News!