• Sep 20 2024

ரஜினியின் 'ஜெயிலர் படத்துக்கு 'யுஏ’ சான்றிதழ்...! அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து முடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், தமன்னா, நெல்சன், அனிருத் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆக இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தற்போது சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .


 

Advertisement

Advertisement