சினிமாவில் அறிமுகமான உடனேயே பெரும் பிரபலமான நடிகர்களில் ராஜ்கிரணும் ஒருவர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரணுக்கு வெகு நாட்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமலே இருந்தார்.
முதல் படம் நடித்தால் அதற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ராஜ்கிரண். ஆனால் அப்போதெல்லாம் இளையராஜாவிடம் அவ்வளவு எளிதில் வாய்ப்பை வாங்கிவிட முடியாது. அதற்கு பிரசாத் ஸ்டுடியோ வாசலில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்திருக்க வேண்டும்.
ஆனால் இளையராஜாவும் ராஜ்கிரணும் அப்போது நண்பர்களாக இருந்தனர், எனவே ராஜ்கிரணுக்கு நடிக்க ஆசையிருப்பது தெரிந்ததும் இளையராஜா அதற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே திரைப்படம் வெளிவந்தது.
அந்த திரைப்படத்தில் துவங்கி அனைத்து திரைப்படங்களிலும் முழு ஈடுப்பாட்டோடு நடித்து வந்தார் ராஜ்கிரண். ராஜ்கிரணின் படங்களில் வரும் காட்சிகளிலேயே அவர் நள்ளி எலும்பு சாப்பிடும் காட்சி மிக பிரபலம். அதை காட்சியாக எடுக்கும்போது எளிமையாக எடுத்துவிட்டனர். ஆனால் டப்பிங் செய்யும்போது அதை சரியாக செய்ய முடியவில்லை. எனவே அந்த காட்சியை எடுத்துவிடலாம் என முடிவு செய்தது படக்குழு.
அப்போது டப்பிங்கில் இருந்த ராஜ்கிரண் வேகமாக தன்னிடம் இருந்த பேனாவை எடுத்து வாயில் வைத்து கடித்து நொறுக்கி அதை ரிக்கார்ட் செய்து, எலும்பு காட்சியில் சேர்க்க சொன்னார். அந்த சத்தம் அப்படியே எலும்பு கடிக்கும் காட்சிக்கு ஏற்றாற் போல இருந்தது. அந்த அளவிற்கு சினிமா மீது ஈடுபாடு கொண்டு ராஜ்கிரண் பணிப்புரிந்துள்ளார்.
Listen News!