சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அமரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை பார்த்ததுமே திருப்தி அடைந்த கமல்ஹாசன் ராஜ்குமார் பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறியதாகவும் கூட செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் வாழ்ந்து பலித்தது போல் தற்போது அவருக்கு தனுஷிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்க இருப்பதாகவும் இருவரும் சமீபத்தில் சந்தித்தபோது ஒரு படத்தில் இணைந்து பணிபுரிவது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த படத்தை மதுரை அன்பு தயாரிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ’அமரன்’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாகவே தனுஷ் ஒரு நல்ல ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர்களை மதிப்பவர் என்பதும் அவருக்கு உடனடியாக சான்ஸ் கொடுக்க முன் வருவார் என்று கூறப்படும் நிலையில், ராஜ்குமார் பெரியசாமிக்கும் தனுஷ் வாய்ப்பு கொடுத்த முன்வந்துள்ளதை அடுத்து ராஜ்குமார் பெரியசாமிக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாகவே கோலிவுட் திரை உலகினர் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!