• Sep 20 2024

ராட்சசன் 2 திரைப்பட பணிகள் ஆரம்பம்! வெளியானது புதிய அப்டேட்!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ராம்குமாரின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், சரவணன் நடித்த ராட்சசன் படம் வெளியாகி 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 2ம் பாகத்தின் பணிகள் தொடங்கி இருப்பதாக படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.



ராட்சசன்' எங்கள் எல்லோருக்கும் 'கேம் சேஞ்சர்' படமாக அமையும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், எங்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தப் படத்திற்குக் கொடுத்த வரவேற்பு எங்களைஆச்சரியப்படுத்தி இருக்கின்றது.

படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனாலும், திரையரங்குகளில் 'ராட்சசன்' படத்திற்குக்கு கிடைத்த கைதட்டல் மற்றும் பாராட்டுகள் இ்பாெழுதும் உற்சாகப் படுத்துகின்றது.இந்நிலையில் ராட்சசன் 2' படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாக இருக்கின்றது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்   விரைவில் வெளியாகும் .

Advertisement

Advertisement