தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமானபோது, கல்லூரியில் ஒரு மாடலாக பணி செய்தார்.
இவர் தற்போது தமிழில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார்.
அந்த வகையில், தற்போது சில்வர் நிற உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த அவருடைய ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Listen News!