• Nov 19 2024

எதிர்பாராத விபத்தில் ராம் சரணுக்கு முகத்தில் காயம்... படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

டோலிவுட் சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தந்தையைப் போலவே பிரபல நடிகராக வலம் வருகின்றார். நடிகராக மட்டுமின்றி ராம் சரண் தனது குடும்ப பெயரான கொனிடேலா என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். 


இந்நிலையில் தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கின்றார். அத்தோடு எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தினுடைய படப்பிடிப்பு 2021-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த வாரம் படக்குழுவினர் முக்கிய சண்டை காட்சிகளை படமாக்கினர். இதில் எதிர்பாராத விதமாக திடீரென்று ஏற்பட்ட விபத்தில் ராம்சரண் முகத்தில் காயம் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று ராம் சரண் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் ராம்சரனுக்கு அறிவுறுத்தி இருப்பதால் சூட்டிங்கில் கலந்து கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராம்சரண் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். 


இதனைத் தொடர்ந்து நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினையால் கேம் சேஞ்சர் படப்பிடிப்பை  ரத்து செய்துள்ளதாகவும், இப்படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement