கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர். தற்போது ஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். முதன்முறையாக ராம் சரணுடன் இணைந்துள்ள ஷங்கர், கேம் சேஞ்சர் படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராம் சரண் நடித்த RRR படம் ஆஸ்காருக்கு சென்றதால் அதற்கான பணிகளுக்காக ராம் சரண் அமெரிக்கா சென்றுவிட்டார். இதனால் கேம் சேஞ்சர் பட ஷூட்டிங் தடைபட்டது. அதன் பின் ராம் சரண் தனிப்ட்ட காரணங்களாலும் கேம் செஞ்சர் ஷூட்டிங் மேலும் தடைப்பட்டது.
இந்நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் செப்டெம்பரில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் கூட வதந்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது படக்குழு இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. சில ஆர்ட்டிஸ்ட்களில் தேதி கிடைப்பதில் வந்த சிக்கல் காரணமாக தான் இப்பட ஷூட்டிங் தடைபட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
Listen News!