இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு விருது மழை பெய்து வருகிறது என்றே சொல்லாம். சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நான்கு பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது.
தெலுங்கு பிரபலங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த RRR திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த சண்டை காட்சிகள் மற்றும் சிறந்த பாடல் என மொத்தம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தில், ‘RRR’ படம் நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்பட இயக்குநரும் ராம் சரணும் மேடையில் அந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர். மேடையில் பேசிய ராஜமௌலி, தனது விருதை இந்தியாவில் உள்ள தனது சக திரைப்பட இயக்குநருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்,
ஏற்கனவே, இந்த படம் கோல்டன் குளோப்ஸ் விருதினை பெற்றது. நேற்று முன் தினம், இப்படம் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் சூப்பர் விருதுகளில் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
Honoured to be representing Indian Cinema at the @HCAcritics 2023 along with @ssrajamouli Garu & @mmkeeravaani Garu.
— Ram Charan (@AlwaysRamCharan) February 25, 2023
I’m proud of the recognition we received as team @RRRMovie tonight. pic.twitter.com/u44ee2peX5
Listen News!