• Nov 19 2024

திருமணமாகி 10 வருடத்தின் பின்னர் கர்ப்பமாகிய ராம் சரணின் மனைவி- மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட சிரஞ்சீவி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருபவர் சிரஞ்சீவி.இவரைப் போலவே இவருடைய மகன் ராம் சரணும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகின்றார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த ஆர் ஆர் ஆர், ஆச்சார்யா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.


தொடர்ந்து பிஸியான நடிகராக வலம் வரும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ராம் சரண் உபசனா என்பவரை திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின் சந்தோஷமாக இருந்த வாழ்க்கையில் 10 வருடமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் 10 வருடம் கழித்து உபசனா கர்ப்பமாகியுள்ளதாக ராம் சரணின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த விசயத்தை கேள்விப்பட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement