• Sep 21 2024

வெளியானது ஆதிபுருஷ் படத்தின் 'ராம் சீதா ராம்' பாடல்... வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ளார். 


மேலும் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார்.


பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படமானது தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சீதா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகி உள்ளது.


இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement