'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராமராஜன். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.
அதிலும் 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்' என பல திரைப்படங்களை இவருடைய வெற்றி படங்களாக கூறிக்கொண்டே போகலாம்.
அத்தோடு கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளிவந்த மேதை எனும் படத்தில் நடித்திருந்த ராமராஜன், அதன்பிறகு மீண்டும் தற்போது தான் ஹீரோவாக சாமானியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர் நடிகராக மட்டுமின்றி சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார்.
இந்நிலையில், முதல் முறையாக நடிகர் ராமராஜன் சின்னத்திரைக்கு வருகை தந்துள்ளார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!