• Sep 20 2024

இனி ரஜினி, கமல், அஜித், விஜய் தான்: ‘சாமானியன்’ சறுக்கியதால் ராமராஜன் எடுத்த அதிரடி முடிவு..

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

ராமராஜன் நடித்த ‘சாமானியன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை அவர் மலை போல் நம்பி இருந்ததாகவும், இளையராஜா இசை மற்றும் தன்னுடைய ரீ என்ட்ரி என்பதால் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று நினைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ராமராஜன் எதிர்பார்த்த அளவு ‘சாமானியன்’ திரைப்படம் வசூல் செய்யவில்லை என்றும் குறிப்பாக இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு போட்ட முதலீடு கூட திரும்ப கிடைக்கவில்லை என்றும் கூறப்படுவதை கேட்டு ராமராஜன் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.

‘சாமானியன்’  படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ராமராஜன் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது படத்தின் தோல்வி காரணமாக தன்னால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடையக் கூடாது என்று முடிவு செய்த அவர், இனிமேல் பெரிய நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தால் போதும் என்ற முடிவை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கமல், ரஜினி, அஜித், விஜய் ஆகியோர்களின் படங்களில் தனது வயதுக்கேற்ற குணச்சித்திர கேரக்டரில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து அவர் அதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இனி ராமராஜனை பெரிய நடிகர்களின் படங்களில் அடிக்கடி பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement