தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரஜினி, சரத்குமார், விஜயகாந் எனப் பல பிரபலங்களுடனும் இணைந்து நடித்து திரையுலகில் வெற்றிக் கொடியை நாட்டி இருக்கின்றார். அந்தக் காலத்தில் இவரின் நடிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார் ரம்யா கிருஷ்ணன்.
மேலும் இவர் இளம் வயதிலேயே ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் 'வெள்ளை மனசு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'படிக்காதவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் 'ஜல்லிக்கட்டு, முதல் வசந்தம், பேர் சொல்லும் பிள்ளை, வானமே எல்லை' உட்படத் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகி, பல படங்களில் நடித்தார்.
எனினும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த 'படையப்பா' படம் தான் மீண்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் கம்பேக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் வில்லி வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். அத்தோடு 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் ராஜமாதா சிவகாமியாக வலம் வந்த இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்தார்.
இவ்வாறாக இன்றும் தன்னுடைய நடிப்புத் துறையை கைவிடாது தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்ற ரம்யா படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். அதில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவார்.
அந்தவகையில் சமீபத்திலும் சேலையணிந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார் ரம்யா. அதில் அவர் கொஞ்சம் கூட வயோதிபத் தோற்றம் இல்லாது ஹீரோயினாக நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அப்படியே கொஞ்சம் கூட அழகு குறையாமல் ஜொலிக்கின்றார்.
இதனைப் பார்த்த நம்ம நீலாம்பரி ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா..? அப்புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்வது மட்டுமல்லாது தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்தும் வருகின்றனர்.
Listen News!