• Sep 20 2024

மது விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்... முக்கிய பிரபலத்தை கட்டியணைத்தபடி நிற்கும் ரம்யா கிருஷ்ணன்... வெளியானது புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.


குறிப்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கலக்கிவரும் ரம்யா கிருஷ்ணன் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.


வெள்ளித்திரையில் மட்டுமன்றி தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றார். அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் விளங்கி உள்ளார். அத்தோடு கலசம், தங்கம், வம்சம் போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். 


அதுமட்டுமல்லாது சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கின்றார். இந்நிலையில் இன்றைய தினம் தனது 53ஆவது பிறந்த நாளை நடிகை ராதிகா உடன் மது விடுதியில் சூப்பராக கொண்டாடியுள்ளார்.


தற்போது இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement