தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தன்னுடைய இளம் வயதிலேயே ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக 'வெள்ளை மனசு' என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாது சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'படிக்காதவன்' என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் 'ஜல்லிக்கட்டு, முதல் வசந்தம், பேர் சொல்லும் பிள்ளை, வானமே எல்லை' என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்றார். எனினும் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாகி பல படங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்த படங்களிலேயே 'படையப்பா' படம் தான் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புத் திறமையை உலகம் பூராகவும் பரப்பி இருந்தது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' என்ற படத்திலும் வில்லி வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' போன்ற படங்களில் ராஜமாதா சிவகாமியாக நடித்துப் பட்டையை கிளப்பியிருந்தார்.
இவ்வாறாக படங்களில் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்திய இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்து பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிபி ஜோடிகள்' நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். அத்தோடு இந்த நிகழ்ச்சியில் தனது 'பிரம்மாஸ்திரா' படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து கலந்து சிறப்பித்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் நாகார்ஜுனாவிடம் "உங்களுடைய க்ரஷ் யார்" என்று கேள்வி கேட்டார். இக்கேள்விக்கான பதிலை நாகார்ஜுனா கூறுவதற்கு முன் நடிகை ரம்யா கிருஷ்ணன் இதற்குப் பதில் கூறிவிட்டார்.
அதாவது அவர் கூறுகையில், " யாரை பார்த்து என்ன கேட்குறீர்கள். நாகார்ஜுனாவிற்கு க்ரஷ் ஒண்ணா ரெண்டா. அவருடைய க்ரஷ் எல்லாம் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், என்னுடைய க்ரஷ் நாகார்ஜுனா தான் " என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் சிரிச்சுக்கிட்டே பதிலளித்திருக்கின்றார்.
இதைக் கேட்டவுடன் நாகார்ஜுனா ரம்யா கிருஷ்ணனுக்கு பிளேன் கிஸ் கொடுக்கின்றார். இந்த க்யூட்டான வீடியோ ஆனது தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!