நடிகர் அஜித்தைப் பின்பற்றி நடிகை ரம்யா பாண்டியனும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளதோடு பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியதன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் இதனைத் தொடர்ந்து விஜய்டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு பிரபல்யமானவர்.
இதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டார்.இதன் மூலம் புகழ்பெற்ற நிலையில் அடுத்து தற்போது திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை பின்பற்றி ரம்யா பாண்டியன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருவதையும் காணலாம்.
மேலும் தல அஜித்தும் நடிப்பில் மட்டும் ஆர்வம் உடையவராக இல்லாது பைக் ரேஷிங் துப்பாக்கி சுடுதல் போன்ற விடங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார் என்பதும் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் அவர் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!