ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியாகிய திரைப்படம் தான் லவ்டுடே.இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம், 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி இவானா, முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆஜித், நவீன் கிருபாகர் ஆகியோர் இணைந்து விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
மேலும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள "ரஞ்சிதமே" பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Ranjithame 😻❤️ @actorvijay #Varisu pic.twitter.com/Qqy3ufQbLQ
Listen News!