• Sep 20 2024

ரஞ்சிதமே பாடல் செய்த மற்றொரு மாபெரும் சாதனை... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத் திரைப்பயணத்தில் 65 படங்களைக் கடந்து விட்ட நிலையில் 66 ஆவது படமாக வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் 'வாரிசு'. தில் ராஜு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் 'ரஞ்சிதமே' பாடல் நேற்று மாலை வெளிவந்தது. 

இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்கள். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் சமூக வலைதளத்தில் எதிர்க்கணிய கருத்துக்களை முன்வைத்து சற்று ட்ரோல் செய்யப்பட்டும் வந்திருந்தது.


இந்நிலையில் கூட இந்தப்பாடல் ஆனது தொடர்ந்து மாபெரும் வெற்றிகளை பெற்று சாதனை படைத்த வண்ணமே இருக்கின்றது. அதாவது Youtube தளத்தில் வெளிவந்த இப்பாடல் ஆனது வெளிவந்து 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற Youtube பாடல்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்து ஏற்கெனவே மாஸ் காட்டி இருந்தது.

அதுமட்டுமல்லாது இதுவரை காலமும் உலகளவில் பல்வேறு மொழி பாடல்கள் மட்டுமே இடம்பிடித்து வந்த இந்த வரிசையில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 24 மணி நேரத்திற்குள் பெற்று விஜய்யின் ரஞ்சிதமே பாடல் முதலிடத்தை பிடித்திருந்தது.  


இதனை விஜய் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்த நிலையில் தற்போது மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போது ரஞ்சிதமே பாடல் 7 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement